மாவட்ட செய்திகள்

ரத்த தானத்தால் தெரிவிக்கப்பட்ட நன்றி!

கனடா நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கும் சிரிய அகதிகள், ரத்த தானம் செய்து தமது நன்றியை வெளிக்காட்டியிருக்கின்றனர்.

கனடாவில் ஒட்டாவாவைச் சேர்ந்த சமாதான மனிதர்கள் எனும் நிறுவனத்தின் சார்பில், சிரிய- கனடிய தான தினம் என்ற பெயரில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. ஹாலிபாக்ஸ், வான்கூவர் உள்ளிட்ட 10 நகரங்களில் இம்முகாம் நடைபெற்றது.

அவற்றில் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்ட சிரிய அகதிகள், ஆர்வத்துடன் ரத்ததானம் செய்திருக்கின்றனர்.

அதன் மூலம், தங்களுக்கு ஆதரவு அளித்த கனடாவுக்கு தாங்கள் நன்றியைத் தெரிவிப்பதாக அவர்கள் கூறினர்.

இதுகுறித்து சிரிய அகதியான முகம்மது அல்சலே கூறுகையில், ரத்த தானம் அளிப்பது வாழ்க்கை கொடுப்பதற்குச் சமமாகும். எங்களுக்கு வாழ்வளித்த கனடாவுக்கு இது நாங்கள் திருப்பிச் செய்யும் கைம்மாறு ஆகும்' என்றார்.

மேலும், இது தொடர்பாக கல்காரியின் சிரிய அகதிகள் ஆதரவுக் குழு அமைப்பின் இணை நிறுவனர் சாம் நம்மோரா கூறும்போது, உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் கேட்கும்போது, உதவி நாடுவோர், உங்களுக்காக என் ரத்தத்தையும் தியாகம் செய்ய முன்வருகிறேன் என்கிறார்கள்.

ரத்தத்தால் தீர்க்கப்படும் நன்றிக்கடன்!