பாசக்கார பய என்ற படத்துக்காக தப்பு மேளத்தைக் கொண்டு சிஞ்சனக்கன செனச்சனக்கா கிழிஞ்சது வேட்டி எனும் குத்துப் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார். அந்தோணி தாஸ், அனிதா இருவரும் பாடியுள்ளனர்.
சிந்துநதிப்பூவில் இடம்பெற்ற ஆத்தாடி என்ன ஒடம்பு பாடலைப்போல், சிஞ்சனக்கன.. பாடலும் ஹிட் ஆகும் என்கிறார், சவுந்தர்யன்.
அவர் மேலும் கூறியதாவது:
பாசக்கார பய, குடும்பப் பாங்கான கதையம்சம் கொண்ட படம். விக்னேஷ் கதாநாயகனாகவும், காயத்ரி கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி விவேக பாரதி இயக்கியுள்ளார்.
தஞ்சை, மயிலாடுதுறை, காவிரி டெல்டா பகுதிகளில் படம் வளர்ந்து இருக்கிறது.