மாவட்ட செய்திகள்

தாராபுரம் மற்றும் தாராபுரம் பகுதியில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாராபுரம் மற்றும் தாராபுரம் பகுதியில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாராபுரம்

தாராபுரம் மற்றும் தாராபுரம் பகுதியில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றை கட்டுக்குள் கொண்டு வரவும், கொரோனாவின் சங்கிலி தொடரை உடைத்து எறியவும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல், இருமல், சளி அறிகுறி தென்படுபவர்கள் உடனே கொரோனா மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்று சோதனை முடிவிற்கு பிறகே தெரியவரும். அதன்படி தாராபுரம் பகுதியில் நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே . அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டுமென்றும் கிராமங்களில் ஒன்றாக சேர்ந்து அமரக்கூடாது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறப்பட்டது.

காங்கேயம்

மேலும் காங்கேயத்தில் 7 பேருக்கும், முத்தூரில் 7 பேருக்கும், நத்தக்காடையூரில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் திருப்பூர், ஈரோடு, கரூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.