தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள மடத்தூர் முருகேசன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (26). நேற்று முன்தினம் சுந்தரராஜன், மணிகண்டன் வீட்டு முன்பு குடிபோதையில் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது மணிகண்டன், சுந்தரராஜனை சத்தம் போட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரராஜன், அங்கு கிடந்த கம்பால் மணிகண்டனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து, சுந்தரராஜனை கைது செய்தார்.