புதுச்சேரி

உதவி தலைமை ஆசிரியர் மாயம்

புதுவையில் உதவி தலைமை ஆசிரியர் மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

புதுச்சேரி

வானூர் தாலுகா பெரிய கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 37). இவர் முத்திரையார்பாளையத்தில் உள்ள முத்திரையர் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அவரது மனைவி திவ்யாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி அவர் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வந்துள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. நேற்று  அவர் தனது உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் 'நான் வீட்டை விட்டு செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்' என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது, அவர் பள்ளிக்கு வந்து சில பொருட்களை எடுத்து சென்றதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து விமல்ராஜின் தந்தை திருமால் கொடுத்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை