மாவட்ட செய்திகள்

தொட்டியம் அருகே மீன் பண்ணை குட்டையில் மூழ்கி 5 வயது சிறுவன் பலி

தொட்டியம் அருகே மீன் பண்ணை குட்டையில் மூழ்கி 5 வயது சிறுவன் பலியானான்.

காட்டுப்புத்தூர், ஏப்.17-
தொட்டியம் அருகே மீன் பண்ணை குட்டையில் மூழ்கி 5 வயது சிறுவன் பலியானான்.
மீன் பண்ணை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாகுமார். இவரது மனைவி தீபா. இந்த தம்பதியின் மகன் கிருத்திக் (வயது 5). இந்தநிலையில் தொட்டியத்தில் உள்ள சகோதரர் ஹரிகரன் வீட்டுக்கு தீபா மகன் கிருத்திக்கை அழைத்து சென்றார். இதற்கிடையில் நேற்று தீபா தனது மகனை தொட்டியம் அருகே கீழக்கரைகாடு கிராமத்தில் உள்ள ரத்தினம் என்பவரது மீன் பண்ணைக்கு அழைத்து சென்றார். அங்கு விளையாடி கொண்டிருந்த கிருத்திக் மீன் பண்ணை குட்டையில் தவறி விழுந்து மூழ்கினான்.
சாவு
இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கிருத்திக்கை மீட்டு தொட்டியத்தில் உள்ளதனியார்மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.