மும்பை

கல்குவாரியில் குதித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்

கல்குவாரியில் குதித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கினார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது21). இவர் இன்று தனது நண்பர்களுடன் மது குடித்தார். பின்னர் போய்தா பாடாவில் உள்ள கல்குவாரிக்கு சென்று உள்ளனர். கடும் வெயில் காரணமாக அஜித் கல்குவாரியில் தேங்கி கிடந்த தண்ணீரில் குளிக்க ஆசைப்பட்டு மேலே இருந்து 20 அடி ஆழமுள்ள தண்ணீரில் குதித்தார். இதன்பின்னர் அவர் நீந்தி மேலே வரவில்லை. இதனால் அவருடன் வந்த நண்பரான சல்மான் சேக் தண்ணீரில் குதித்து தேடினர். முயற்சி பலன் அளிக்காததால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். தண்ணீரில் மூழ்கிய அஜித்தை தேடி வருகின்றனர். இரவு நேரமானதால் தேடும் பணியை நிறுத்தி வைத்து உள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்