மாவட்ட செய்திகள்

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

திருவாரூர் மாவட்ட மைய நூலகத்துக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட மைய நூலகத்துக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட மைய நூலகம்

திருவாரூர் நாகை பைபாஸ் சாலையில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் போட்டி தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளும் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலகத்திற்கு செல்லும் தார்சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் நூலகத்திற்கு வரும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நூலகத்தினை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் கால்நடைகள் அதிகமாக சுற்றி திரிகிறது.

சீரமைக்க வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட மைய நூலகத்துக்கு செல்லும் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் சுற்றுச்சுவர் அமைத்து சாலையின் இருபுறங்களிலும் முட்செடிகளை அகற்றி மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

---