புதுச்சேரி

தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

காரைக்காலில் டயர் வெடித்ததால் தாறுமாறாக ஒடிய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்காலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று கடற்கரையாகும். இங்கு நடைபயிற்சி மேற்கொள்ளவும், பொழுதுபோக்கிற்காகவும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர் அபிஷேக் (வயது 19) காரில் கடற்கரை சாலைக்கு வந்தார். அப்போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்ததால் விபரீதமாகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர நடைபாதையில் ஏறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய அபிஷேக் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். நல்லவேளையாக கார் தறிகெட்டு ஓடும் போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு