சினிமா துளிகள்

வலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

நடிகர் விஜய்யின் 65-வது படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார்.

தளபதி 66 படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.

வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் முன் அறிவிப்போடு தான் வெளியிடப்படும். ஆனால் சமீப காலமாக அந்த டிரெண்ட் மாறி உள்ளது. அஜித்தின் வலிமை குறித்த அறிவிப்புகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டன. அதேபோல் தற்போது விஜய்யின் தளபதி 66 அப்டேட்டும் அவ்வாறே வெளியிடப்பட்டு உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்