மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் 31 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் 31 பேர் கைது

மதுரை,

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. ரேஷன்கடைகளில் தரமான பொருட்களை, எடை குறையாமல் கொடுக்க வேண்டும். விடுபட்ட அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகளையும், ரேஷன்கார்டு கேட்டு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு கார்டுகளையும் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை எனக்கூறிபோலீசார் அவர்களை தடுத்தனர். அதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து மாதர் சங்க செயலாளர் சசிகலா உள்ளிட்ட 31 பேரை போலீசார் கைது செய்தனர்.