புதுச்சேரி
புதுவை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு மாணவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
உதவித்தொகை பெறும் மாணவிகள் குறித்த விவரங்களை கல்வித்துறை கேட்டிருந்தது. ஆனால் 26 சதவீத மாணவிகள் குறித்த விவரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. எனவே வருகிற 30-ந்தேதிக்குள் scholarship@dsepdy.edu.in அனைத்து மாணவிகளின் முழுவிவரங்களை தெரிவிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் பிரியதர்ஷினி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.