புதுச்சேரி

மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடின

புரட்டாசி முதல் சனிக்கிழமையில் மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடின.

தினத்தந்தி

புதுச்சேரி

புரட்டாசி முதல் சனிக்கிழமையில் மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடின.

புரட்டாசி விரதம்

புரட்டாசி மாதம் பக்தர்கள் விரதமிருந்து பெருமாளை வணங்குவது வழக்கம். கடந்த 18-ந்தேதி புரட்டாசி மாதம் பிறந்த நிலையில் பெருமாள் பக்தர்கள் விரதம் கடைபிடிக்க தொடங்கி விட்டனர்.

வழக்கமாக வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவு சாப்பிடுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவுகளை நினைத்துக்கூட பார்க்கவில்லை.

வெறிச்சோடிய மார்க்கெட்டுகள்

இதனால் இறைச்சி கடைகளில் கூட்டம் இல்லை. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட், முதலியார்பேட்டை மார்க்கெட், செஞ்சிசாலை மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்கடைகள் வெறிச்சோடி கிடந்தன.

இந்த மாதம் முழுவதும் இறைச்சி, மீன் விற்பனை என்பது சுமாராகவே இருக்கும். புரட்டாசி மாதத்துக்கு பின்னரே மீண்டும் இறைச்சி, மீன் வியாபாரம் சூடுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை