மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தியவர் கைது

தூத்துக்குடியில் சிறுமியை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி காதர் மீரான் நகரைச் சேர்ந்தவர் ஜானி. இவருடைய மகன் கணேசன் (வயது 22). இவர் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி கணேசனை கைது செய்து, கடத்தப்பட்ட சிறுமியையும் மீட்டனர்.