சினிமா துளிகள்

அருண் விஜய் படத்தின் அடுத்த அப்டேட் வெளியானது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய்யின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் திரைப்படம் யானை. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இதற்குமுன் இந்த ஜோடி மாபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கே.ஜி.எப் பிரபலம் ராம், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு ஆகியோர் யானை படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கிராமத்துக் கதையை மையமாக வைத்து ஆக்சன் படமாக யானை உருவாகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் அடுத்த பாடலான "போதைய விட்டு வாலே என்ற பாடலை பிப்ரவரி 11ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை