தற்கொலை செய்துகொண்ட லோகசந்தரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
புதுச்சேரி

போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

ஏ.சி. மெக்கானிக்கை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

தினத்தந்தி

மூலக்குளம்

ஏ.சி. மெக்கானிக்கை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

தற்கொலை

புதுச்சேரி பிச்சைவீரன்பேட் புதுநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகசந்தர் (வயது 27). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்து பெண் பார்த்து வந்தனர். இந்த நிலையில் லோகசந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

அவரை வீட்டில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், பலனின்றி லோகசந்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகசந்தர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இன்று காலை பிச்சைவீரன்பேட் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் காலை 11 மணியளவில் திடீரென்று புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளக்காதல்

இது பற்றி தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், லோகசந்தர் அந்த பகுதியை சேர்ந்த 40 வயது திருமணமான பெண் ஒருவருடன் பழகி வந்ததாகவும், லோகசந்தருக்கு திருமண ஏற்பாடு செய்த நிலையில் அந்த பெண் அவரை மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

லோகசந்தரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுபற்றி புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதன் பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை