புதுச்சேரி

2 ஊழியர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறல்

புதுவையில் விடுதியில் ரகசிய கேமரா வைத்த 2 ஊழியர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரி 100 அடி ரோட்டில் உள்ள ஜே.ஜே. தங்கும் விடுதியில் உள்ள அறையில் சுற்றுலா பயணிகளின் அந்தரங்க செயல்களை படம்பிடிக்கும் வகையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அங்கு தங்கியிருந்த உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் பிரியன் (வயது 22) என்பவர் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து அந்த விடுதியின் உரிமையாளரான இளைய ஆழ்வார் (45), மேலாளர் இருதயராஜ் (59) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விடுதி ஊழியர்களான ஆனந்து, ஆபிரகாம் ஆகிய 2 பேரும் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். ஒரு வாரமாக முகாமிட்டுள்ள போலீசார், அவர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு