புதுச்சேரி

ரியல் எஸ்டேட் புரோக்கருக்கு அடி-உதை

திரு-பட்டினம் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கரை தாக்கிய சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

திரு-பட்டினம்

திரு-பட்டினத்தை அடுத்த கீழவாஞ்சூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆசைதம்பி (வயது 50). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் (26). அவரது தம்பி நந்தகுமார் (24) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று நவீன்குமாரும், நந்தகுமாரும் தெருவில் நின்று கொண்டு தகாத வார்த்தையால் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து ஆசைதம்பி தட்டிக்கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சோந்து ஆசைதம்பியை அடித்து உதைத்துள்ளனர். மேலும் தடுக்க முயன்ற அவரது மனைவி ரேகாவையும் (45) தகாத வார்த்தையால் திட்டி தாலிசங்கிலியை அறுத்து வீசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திரு-பட்டினம் போலீஸ் நிலையத்தில் ஆசைதம்பி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன், தம்பியை வலைவீசி தேடி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்