மும்பை

சம்பாஜி பிடே விவகாரம்; பிரிதிவிராஜ் சவானுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவானுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தவர் கைது

மும்பை, 

அமராவதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்து அமைப்பை சேர்ந்த சம்பாஜி பிடே, மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டார். இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து சம்பாஜி பிடே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சம்பாஜி பிடேவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிரிதிவிராஜ் சவானுக்கு மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பிரிதிவிராஜ் சவானுக்கு மிரட்டல் விடுத்தது புனேவை சேர்ந்த அங்குஷ் சுரேடே என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். 

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு