புதுச்சேரி

முத்து பல்லக்கில் செங்கழுநீர் அம்மன் வீதிஉலா

வீராம் பட்டினத்தில் தேர் திருவிழாவையொட்டி முத்து பல்லக்கில் செங்கழுநீர் அம்மன் வீதிஉலா நடந்தது.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் அடுத்துள்ள வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று இரவு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுமார் 60 அடி நீளமும், 20 அகலமும் கொண்ட சிறப்பு முத்துபல்லக்கில் வீதி உலா வந்தது. நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர், மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு