சினிமா துளிகள்

சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

தினத்தந்தி

அன்னதானப்பட்டி:

பரியேறும் பெருமாள், கர்ணன் படப் புகழ் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படமான மாமன்னன் எனும் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் பகத் பாசில், நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இது ஒரு அரசியல் திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சேலம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அதில் உதயநிதி ஸ்டாலின் சேலம் அண்ணா பூங்கா அருகே புல்லட்டில் செல்லும் காட்சி பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வேகமாகப் பரவி வருகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்