மாவட்ட செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

சாத்தூரில் அடிப்படை வசதிகள் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

சாத்தூர்,

சாத்தூர் யூனியன் மேட்டமலை கிராம பஞ்சாயத்து மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் முத்துராமனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தின் வடக்கு பகுதியில் ஊராட்சி மன்றம் சார்பில் எந்தவித அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை அதிகம் உள்ளது. வடக்குத்தெருவின் நடுவில் ஓடும் ஓடைக்கு தடுப்புச்சுவர் கிடையாது. மேலும் முறையான வடிகால் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே அதிகாரிகள் எங்கள் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.