முன்னோட்டம்

பெற்றோர் கைவிடும் சிறுவர்கள் கதை

தினத்தந்தி

ராசா விக்ரம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் `புது வேதம்'. விட்டல் மூவிஸ் தயாரித்துள்ளது. இந்த படம் குறித்து ராசா விக்ரம் கூறும்போது, ``சமீப காலமாக சாதியைப் பற்றிப் பேசும் படங்கள் அதிகமாக வருகின்றன. அதில் `புதுவேதம்' படத்தின் கதைக்களம் வித்தியாசமானது. பல்வேறு காரணங்களால் பெற்றவர்களால் கைவிடப்படும் சிறுவர்கள் சிலர் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, புறநகரில் கொட்டப்படும் கழிவுகளில் உள்ள குப்பைகளைப் பொறுக்கி, தங்களின் வாழ்வை அமைத்துக் கொள்கிறார்கள்.

இவர்களின் உழைப்பை சில பெரிய மனிதர்கள் பயன்படுத்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்கிறார்கள். அதில் சிலர் இறக்கவும் நேரிடுகிறது. அதனால் அரசு குப்பையை எடுத்து விற்க தடை விதிக்கிறது. இதனால் குப்பை மேட்டிலேயே வசிக்கும் சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் மட்டும் பெற்றோர்களால் கைவிடப்படாமல் பாதுகாப்பாக இருந்திருந்தால் படித்து பட்டம் பெற்று பொறுப்பான வேலைக்கு சென்றிருப்பார்கள் என்பதை யதார்த்தமாக சொல்வது தான் புதுவேதத்தின் கதை'' என்றார்.

இதில் விக்னேஷ், ரமேஷ் வருணிகா, சஞ்சனா, இமான் அண்ணாச்சி, சிசர் மனோகர், டாக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இசை: ரபி தேவேந்திரன். இணை தயாரிப்பு: மஞ்சுநாத் புகழ்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து