சினிமா துளிகள்

ஒரு எளியவனின் போராட்டம் - ‘வீரமே வாகை சூடும்’

விஷால் நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் படம், ‘வீரமே வாகை சூடும்.’ புதுமுக டைரக்டர் து.ப.சரவணன் இயக்கிய படம், இது.

எனிமி படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் விஷால் நடித்துவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அதிகார வர்க்கத்துக்கு எதிராக போராடும் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரை பற்றிய கதை. அடுத்த மாதம் (ஜனவரி) திரைக்கு வர இருக்கிறது.

சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.