மும்பை

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

மும்பை, 

மும்பையில் 35 வயது பெண் ஒருவர் சம்பவத்தன்று தனது கணவருடன் மின்சார ரெயிலில் பயணம் செய்தார். டேம்பிவிலி- காட்கோபர் இடையே வந்து கொண்டு இருந்தபோது வாலிபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டார். உடனே பெண்ணின் கணவர் மற்றும் பயணிகள் அந்த ஆசாமியை மடக்கி பிடித்தனர். காட்கோபர் ரெயில் நிலையம் வந்ததும் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் விக்ரோலியை சேர்ந்த ஹரீஷ் சுடலா(வயது 27) என்று தெரியவந்தது. சம்பவம் நடந்தது டேம்பிவிலி ரெயில்வே போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது என்பதால் வழக்கு அந்த போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் ஹரீஷ் சுடலாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. ஓடும் ரெயிலில் கணவருடன் வந்த பெண் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் பயணிகள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்