மாவட்ட செய்திகள்

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் மேலக்கருங்குளம் பீடி காலனி ரோஜா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்ற அம்மாவடை (வயது 47). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் துரைகுமார் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து பாலசுப்பிரமணியன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவதற்கான உத்தரவு நகலை மேலப்பாளையம் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பித்தனர்.