மாவட்ட செய்திகள்

மகாராஜாகடை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது

மகாராஜாகடை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது.

குருபரப்பள்ளி:

மகாராஜாகடை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது.

லாரியில் தீ

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை போலீஸ் நிலையம் அருகில் உள்ள விளையாட்டு மைதானம் பகுதியில் வைக்கோல் ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது வைக்கோலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியை நிறுத்தி கீழே இறங்கினார்.

இந்த தீவிபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அக்கம் பக்கத்தினர் பொக்லைன் எந்திரத்தின் மூலம் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகளை அகற்றி கீழே தள்ளினர்.

விசாரணை

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் லாரி மற்றும் வைக்கோல் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து மகாராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.