மாவட்ட செய்திகள்

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார் மனு

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார் மனு அளித்தார்.

வேலூர்

காட்பாடி சேனூர் வீரக்கோவில் தெருவை சேர்ந்தவர் சோபா. இவர் தனது 3 குழந்தைகளுடன் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும் எங்கள் பகுதியில் உள்ள வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரும் காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். தற்போது என்னை எனது கணவர் கைவிட்டு சென்று விட்டார். இதுகுறித்து நான் காட்பாடி போலீசில் புகார் செய்தேன். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 3 குழந்தைகளுடன் தவித்து வருகிறேன். என்னையும், எனது கணவரையும் சேர்த்து வைகக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.