தூத்துக்குடி,
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7வது தெருவை சேர்ந்தவர் முரளிதரன்(வயது 40). கூலித் தொழிலாளி. இவர் மட்டக்கடை பஜாரில் வந்து கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த மட்டக்கடை வடக்கு ராஜாதெருவை சேர்ந்த கென்னடி மகன் சிம்சன்(22) என்பவர் முரளிதரனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினாராம். இது குறித்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிம்சனை கைது செய்தனர்.