மாகி
புதுவையின் ஒரு பிராந்தியமான மாகி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 57). இவர் மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.இவர் தனது மனைவி பிரியாவுடன் கடந்த 19-ந்தேதி கன்னியாகுமரிக்கு சென்றிருந்தார். நேற்று அவர் மாகி திரும்பினார்.அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம், தங்கசங்கிலி, கம்மல் என ரூ.60 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
புகாரின்பேரில் மாகி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.