திண்டிவனம்,
திண்டிவனம் மரக்காணம் ரோடு மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 54). இவர் தனது மோட்டார் சைக்கிளை ரெயில்வே நிலையம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அருகில் நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதேபோல் திண்டிவனம் அய்யாசாமி கோவில் தெருவை சேர்ந்த இளவரசன் (42) என்பவருடைய மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.