சினிமா துளிகள்

எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் - சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் தற்போது ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

தினத்தந்தி

நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம். இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் சூர்யா, எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் என்று பேசும் வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது