மும்பை

4-வது கொரோனா அலைக்கு தற்போது வாய்ப்பில்லை- மந்திரி ராஜேஷ் தோபே பேச்சு

மராட்டியத்தில் தற்போதைய சூழ்நிலையில், 4-வது கொரோனா அலைக்கு வாய்ப்பில்லை என்று சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் தற்போதைய சூழ்நிலையில், 4-வது கொரோனா அலைக்கு வாய்ப்பில்லை என்று சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.

மராட்டிய சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே இன்று நாக்பூரில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

4-வது அலை

மராட்டியத்தில் சராசரியாக தினமும் 200 முதல் 250 பேர் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உயரவில்லை. தொற்று பாதிப்பால் குணமடைபவர்கள் விகிதம் அதிகமாகவே உளளது. மாநிலத்தில் தடுப்பூசி முடிவும் சிறப்பாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போதைக்கு மராட்டியத்தில் கொரோனா 4-வது அலைக்கான வாய்ப்பு இல்லை.

பூஸ்டோஸ் டோஸ்

பூஸ்டர் டேஸ் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் முன்கள பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று மத்திய அரசின் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

-----

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது