புதுச்சேரி

மாகி, ஏனாமில் கொரோனா தொற்று இல்லை

புதுச்சேரியில் கொரோனா தொற்று 30 பேருக்கு உறுதியானது, மாகி, ஏனாமில் கொரோனா தொற்று இல்லை.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 296 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி யானது. புதுவையில் 26 பேரும், காரைக்காலில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் மாகி, ஏனாமில் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.

இதுவரை 23 லட்சத்து 79 ஆயிரத்து 542 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 784 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 23 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 13 பேர், வீடுகளில் 329 பேர் என 342 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

தொற்று பரவல் 10.14 சதவீதமாகவும், குணமடைவது 98.66 சதவீதமாகவும் உள்ளது. நேற்று கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 115 பேரும், 2-வது தவணையை ஆயிரத்து 240 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 3 ஆயிரத்து 886 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 20 லட்சத்து 53 ஆயிரத்து 9 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து