மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

மாணவர் சேர்க்கை


தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த பள்ளியில் சேருவதற்கு 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய பயிற்சிகளுக்கு 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம் ஆகிய பயிற்சிகளுக்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

இசைப்பள்ளி படிப்பின் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

வாய்ப்புகள்

அனைத்து மாணவமாணவிகளுக்கும் அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும். வெளி இடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வசதியும் செய்து தரப்படும். 3 ஆண்டுகள் பயின்று அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக்கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இசைப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவமாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டு உள்ளது.

கூடுதல் விவரம்

எனவே கலை ஆர்வம் உள்ள மாணவமாணவிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, குரூஸ்புரம் சமுதாய நலக்கட்டிடம், தூத்துக்குடி என்ற முகவரியிலும், 04612300605, 9443810926 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.