மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் மணல் கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடியில் மணல் கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முறப்பநாடு அருகே உள்ள காலாங்கரை பகுதியில் ஆற்று மணல் கடத்திய வழக்கில் கலியாவூர் வேதக்கோயில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் பெருமாள் (வயது 20) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் பாளயங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் சட்டத்தின் கீழ் பெருமாளை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பாளையங்கோட்டை சிறையில் வழங்கினார்.