மாவட்ட செய்திகள்

ஜெயங்கொண்டநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

மன்னார்குடி:

மன்னார்குடி பாமணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஜெயங்கொண்டநாதர் கோவிலில் ஜெயங்கொண்டநாதருக்கும் பிரகன்நாயகி அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெயங்கொண்டநாதருக்கும், பிரகன்நாயகி அம்மனுக்கு கோவில் அர்ச்சகர்கள் திருக்கல்யாணம் செய்வித்தனர்.இதனையடுத்து சாமிக்கும், அம்மனுக்கும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.