மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி: அடிதடி வழக்கு குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலியில் 2 குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபரை அசிங்கமாக பேசி கம்பால் தாக்கினார்.

கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த பேச்சிதுரை (வயது 35) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன்(31) என்பவர் அசிங்கமாக பேசி கம்பால் தாக்கினார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை முடிவில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கண்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயசங்கரகுமாரி நேற்று, குற்றவாளிக்கு 8 நாட்கள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகுமார், இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்), குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் வனிதா ஆகிேயாரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.