நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி
தென்காசி நகர அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பூக்கடை பஜார் அருகில் ஜெயலலிதாவின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க கொடி ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் மற்றும் பெருமாள் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாமலை, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன்ராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் உச்சிமாகாளி என்ற துப்பாக்கி பாண்டியன், இலஞ்சி செயலாளர் மயில்வேலன், மேலகரம் நகரப்பஞ்சாயத்து முன்னாள் தலைவர் நன்னை பாலசுப்பிர மணியன், அ.தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் சமீம் இப்ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி அருகே உள்ள இலஞ்சி சவுக்கை முக்கில் ஜெயலலிதா உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இலஞ்சி செயலாளர் டி.மயில்வேலன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க இயக்குநர் அண்ணமலை ராஜா, மாவட்ட பிரதிநிதி சங்கு பாண்டியன், மாரியப்பன், மூக்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இலஞ்சி பஸ் நிறுத்தத்தில் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் காத்தவராயன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தில் மாவட்ட மகளிர் அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் சமீம் இப்ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்,
வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேவிபட்டினம் காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வசந்தி முருகேசன் எம்.பி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் மதுரம், துரை பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கற்பகம் குருநாதர், சிவகரி நகர செயலாளர் கோபால கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர்
வள்ளியூர் தெற்கு மெயின் ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இ.நடராஜன், வள்ளியூர் ஒன்றிய செயலாளர் அழகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பால்துரை வரவேற்றார். நெல்லை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., அ.தி.மு.க கொடியை ஏற்றி வைத்து அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலாளர் ஞானபுனிதா, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சேர்மபாண்டி, ஒன்றிய செயலாளர்கள் ராதாபுரம் அந்தோணி அமலராஜா, களக்காடு ஜெயராமன், நாங்குனேரி விஜயகுமார், பாளை.மருதூர் ராமசுப்பிரமணியன், வழக்கறிஞர் பழனிசங்கர், நிர்வாகிகள் செட்டிகுளம் செல்வகுமார், மோகன் குமாரராஜா, பொன்செல்வன், செழியன், மாடசாமி, எட்வர்ட்சிங், கல்யாணசுநடதரம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். வள்ளியூர் நகர செயலாளர் தவசிமுத்து நன்றி கூறினார்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் தாலுகா குருக்கள்பட்டியில் நடந்த விழாவுக்கு, மேலநீலிதநல்லுர் முன்னாள் யூனியன் தலைவர் முருகையா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகையா பாண்டியன் முன்னிலை வகித்தார். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு கட்சியினர் மலர் துவி மரியாதை செலுத்தினர். கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், நிலவள வங்கி துணை தலைவர் மகாராஜா, ஊராட்சி கழக செயலாளர் மாரிராஜா, கிளை செயலாளர் சண்முகையா, பேரவை செயலாளர் மாரிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க சார்பில் பஸ்நிலையம் அருகே நடந்த விழாவுக்கு, கூட்டுறவு சங்க மாநில துணை தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். தொகுதி இணை செயலாளர் வேலுச்சாமி, நகர செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் கந்தவேல், பொருளாளர் பரமகுருநாதன், எம்.ஜி.ஆர் இளைஞரணி தலைவர் சவுந்தர், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சின்னராஜ், ஒன்றிய செயலாளர் வேல்முருகன், ஒன்றிய பேரவை செயலாளர் சண்முகையா, நகர பாசறை இணை செயலாளர் மாரியப்பன், முன்னாள் நகரசபை கவுன்சிலர்கள் ஆனந்த், முத்துக்குட்டி, ராமதுரை, நாகரத்தினம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அம்பை
அம்பையில் முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்பை அரசரடி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் வெள்ளி தண்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறை அலுவலகம் முன்பு கட்சி கொடியேற்றி, பூக்கடை பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு இணையதள தலைவர் சக்திவேல் முருகன், மாவட்ட துணை செயலாளர்கள் முத்துசாமி, பார்வதி பாக்கியம், இளைஞர் பாசறை மாவட்ட இணை செயலாளர் வெங்கட்ராமன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர்கள் அறிவழகன், கண்ணன், சங்கர நாராயணன், ஒன்றிய பாசறை செயலாளர் மாரிமுத்து, கல்லிடைக்குறிச்சி முத்துகிருஷ்ணன், அரசு வக்கீல் குமார், மாரியப்பன், நிர்வாகிகள் தெய்வநாயகம், விஜயபாலாஜி, சோம.செல்லையா, மகேசுவரன், முத்துலட்சுமி, கணேசன், சேக் முகம்மது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கடையம்
கடையத்தில் நடந்த விழாவுக்கு, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் எம்.பி. தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட மாணவரணி செயலாளர் முருகேசன், முன்னாள் யூனியன் தலைவர் டி.பி.டி பொன்னுத்துரை, முன்னாள் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆர்.லிங்கம், நகர செயலாளர் சங்கர், கூட்டுறவு சங்க துணை தலைவர் புளி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச்செயலாளர் ராஜவேல், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் ராமதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.