இதில் கலையரசன், ஆனந்தி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். பாலா, சுதா கொங்கரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த எம்.ஜானகிராமன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகிறார்.
இது காதல் கலந்த நகைச்சுவை படம். சென்னை, கோவை, கொடைக்கானல், பெங்களூரு ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது. படத்தின் உச்சக்கட்ட காட்சி, இன்ப அதிர்ச்சியூட்டும் என்கிறார், சி.வி.குமார்.