புதுடெல்லி,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 30 ஆம்தேதி கடைசிநாளாகும். மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலை நிறுத்தி வைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமாக இருப்பதால் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.