தென்காசி,
தென்காசியில் திமுக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கில் சூப்பர் ஸ்டாராக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். மகளிர் உரிமை தொகையை ரூ.2000 ஆக உயர்த்தபோகிறோம்.
இல்லத்தரசிகளுக்காக ரூ.8000 கூப்பன் திட்டத்தையும் அமல்படுத்த இருக்கிறோம். ரூ.8,000 கூப்பன் தொகையை கொண்டு டிவி உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தாத பம்புசெட்டை வாங்கி தர விருக்கிறோம். சொன்ன திட்டங்கள் அனைத்தையும் செய்வேன். நான் கலைஞரின் மகன்.
அனைவருக்கும் செல்போன் என்பது உள்ளிட்ட பல திட்டங்களை அதிமுக நிறைவேற்றவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் தோல்வியை தர வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், நாம என்ன படிக்க வேண்டும் என்பதை நம்மால் முடிவு செய்ய முடியாது.
தமிழ்நாட்டுக்கு பிரசாரத்துக்கு வரும் பிரதமர், உள்துறை மந்திரி மும்முமொழி கொள்கையை அமல்படுத்துவோம் என கூறுவார்களா?
அதிமுக - பாஜகவால் அமல்படுத்த திட்டங்களை கூற முடியவில்லை. திமுக அரசின் சாதனைகளை நெஞ்சை நிமர்த்தி கூற முடியும். அதிமுக பாஜக கூட்டணியில் முரண்பாடுகள் உள்ளன. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி.
பழனிசாமியின் கூட்டணியை நான் விரும்பவில்லை. வெட்கப்படுகிறேன் என டிடிவி தினகரன் பேசினார்.
எடப்பாடி பழனிசாமியை பாஜகவினர் மோசமாக பேசினர். ஆனால் கூட்டணியாக உள்ளனர்.
நாட்டில் உள்ள மக்கள் மோடி ஜி வேர் இஸ் எல்பிஜி என கேள்வி எழுப்பி வருகிறார்கள். சிலிண்டர் விலை, சுங்கச்சாவடி கட்டணம் என பல்வேறு கட்டணங்களை உயர்த்தி வருகின்றனர். நான் முதல்வன் திட்டம் அறிக்கையில் குறிப்பிடாமலேயே தொடங்கி மாணாக்கர்கள் பயன்பெறுகின்றனர்.
எங்கள் திட்டங்களை கூறுவதுபோல் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என கூற முடியுமா? ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியவர்தான் பழனிசாமி.
பழனிசாமி வென்றால் தமிழ்நாட்டை டெல்லி தான் ஆளும். டெல்லியில் ரிமோர் ஆப்பரேட் செய்தால் பழனிசாமி ஆடுவார். தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.