தேர்தல் 2026

புதுச்சேரி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி - பிரதமர் மோடி

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 30 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ந் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் 30 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடி வரும் 30-ம் தேதி புதுச்சேரி வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை என்ஜின் என்.டி.ஏ. அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது. ஆகவேதான் புதுச்சேரி மக்கள் மீண்டும் என்.டி.ஏ. அரசை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

'எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி - புதுச்சேரி' நிகழ்ச்சியில், மார்ச் 30 மாலை 5:30 மணிக்கு பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.