தேர்தல் 2026

‘தி.மு.க.வின் கோட்டையில் ஓட்டை வந்துவிட்டது’ - அன்புமணி விமர்சனம்

சென்னை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. வெற்றி பெறப்போவது கிடையாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மூலம் சென்னையில் இருந்த 40 லட்சம் வாக்காளர்களில் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இத்தனை காலமாக தி.மு.க. கள்ள ஓட்டு போட்டு சென்னையை தங்கள் கோட்டையாக வைத்திருந்தார்கள். இப்போது அந்த கோட்டையில் பெரிய ஓட்டை வந்துவிட்டது.

எனவே உறுதியாக சென்னையில் தி.மு.க. வெற்றி பெறாது. சென்னை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. வெற்றி பெறப்போவது கிடையாது. இதனை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். தி.மு.க. மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள்.

மாநிலத்தில் உள்ள பெண்களை பாதுகாக்க முடியாவிட்டால், உங்களுக்கு முதல்-அமைச்சர் பதவி எதற்கு? பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உங்களால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை. மக்கள் எதற்காக உங்களுக்கு ஓட்டுப் போட வேண்டும்? ”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.