தேர்தல் 2026

கடன் வாங்குவதில் தான் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி

என் மீது கோபப்பட்டு என்ன பயன்? ராசாவிடம் கேளுங்கள் அவர் சொல்வார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்

திருவண்ணாமலை,

அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் பேச வந்ததை ஸ்டாலின் உற்று நோக்க வேண்டும். உங்கள் கோபத்தை என்னிடம் காட்டாதீர்கள். ஆ.ராசா மீது காட்டுங்கள். திருநெல்வேலி பொதுக்கூட்டதில் கோபத்தை கக்கி, எரிச்சலை வெளிப்படுத்துகிறார் ஸ்டாலின்.

கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாக கூறியுள்ளது ஆ.ராசாதான். அதைத்தான் நான் சொன்னேன். என் மீது கோபப்பட்டு என்ன பயன். ராசாவிடம் கேளுங்கள் அவர் சொல்வார்.

அப்பாவையே சிறையில் அடைக்கிறீர்களே இது நியாயமா? உங்களை ஆளாக்கி, பதவி கொடுத்தவர் கருணாநிதி.

அப்பாவை சிறையில் வைத்ததாக கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியே சொல்கிறார். ஸ்டாலின் பேச பேச இதில் உண்மை இருக்குமோ என மக்கள் சந்தேகிக்கின்றனர். தந்தைக்கே இப்படிப்பட்ட கதி என்றால் நாட்டு மக்களுக்கு என்ன நிலை என எண்ணிப்பாருங்கள். அழகிரியை ஒதுக்கிவிட்டீர்கள், கனிமொழியை மாநில அரசுக்கு வரவிடவில்லை ஸ்டாலின்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறினார். துரைமுருகன் 2021 தேர்தல் பிரசாரத்தில் இதுதான் கடைசி தேர்தல் என சொல்லி வாக்கு பெற்றார். இமுறை தேர்தலில் வென்றால் அதிக முறை சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயர் பெறலாம் என போட்டியிடுகிறார்.

`கடன் வாங்குவதில் தான் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. திருவண்ணாமலையில் கட்டப்பட்ட பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. தென்பெண்ணையாற்று பாலம் தரமில்லாமல் கட்டப்பட்டது. இது குறித்து அதிமுக ஆட்சி அமைந்த பின் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.