இவர் இப்போது டைரக்டர் விஜய் இயக்கிய தலைவி (தமிழ்) படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதை.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததும் கங்கனா ரணாவத் சென்னையில் இருந்து மும்பை சென்றார். இந்த நிலையில், கங்கனா ரணாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.