பெங்களூரு

பா.ஜனதா கட்சியை வளர்க்க கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம்- எடியூரப்பா பேட்டி

பா.ஜனதா கட்சியை வளர்க்க கர்நாடக முழுவதும் எடியூரப்பா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, பா.ஜனதா கட்சியின் உயர்நிலை குழு மற்றும் தேர்தல் குழுவில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் டெல்லி சென்ற முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசி இருந்தார். கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கூடுதல் நேரம் ஒதுக்கும்படி பிரதமர் மோடியிடம் எடியூரப்பா கேட்டுக் கொண்டார். இதுகுறித்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினேன். கட்சியில் உயர் பதவி வழங்கியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க முடியவில்லை. அவர், வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்ததால், அவரை சந்திக்க முடியாமல் போனது. ஆனாலும் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். மாநிலத்தில் கட்சியை பலப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தும்படி பிரதமர் தெரிவித்து உள்ளார். அவருடன் 20 நிமிடம் பேசினேன். அதில் 15 நிமிடம் கர்நாடக அரசியல் பற்றி விவாதித்தேன். அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்க உள்ளேன். நான், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவாகள் இணைந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்