மாவட்ட செய்திகள்

சமூக வலைதளத்தில் அவதூறு; பேரூராட்சி பணியாளர் கைது

பெரியார் வேடம் அணிந்த குழந்தை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பேரூராட்சி தற்காலிக பணியாளர் கைது செய்யப்பட்டார்.

கயத்தாறு:

கயத்தாறு பேரூராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ் குமார் பாபு (வயது 37). இவர் சிறு குழந்தை பெரியார் வேடம் அணிந்து நாடகம் நடித்ததை பார்த்து, அந்த குழந்தையை தூக்கிலிட வேண்டும் என்று சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கயத்தாறு பேரூர் தி.மு.க. செயலாளர் சுரேஷ் கண்ணன் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேஷ் குமார் பாபுவை கைது செய்தனர்.