காரிமங்கலம்:
காரிமங்கலம் ஒன்றியம் அடிலம் ஊராட்சியில் விவசாயிகள் முன்னேற்ற சங்கத்திற்கு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் டிராக்டர் மற்றும் பவர் டிரில்லர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபா அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், சங்க துணைத் தலைவர் அருள்மொழி, செயலாளர் சண்முகம், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை பொறியியல் துறை பொறியாளர் வடிவேல் ரூ.8 லட்சம் மானியத்துடன் கூடிய டிராக்டர் மற்றும் பவர் டிரில்லர் எந்திரத்தை சங்க தலைவர் சிவானந்தனிடம் வழங்கினார். இதன் மூலம் டிராக்டர் மற்றும் பவர் டிரில்லர் ஆகியவற்றை விவசாய பணிகளுக்கு வாடகைக்கு விட்டு சங்க பொருளாதாரத்தை முன்னேற்ற கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் நாகராஜன், சிங்காரவேல், இயக்குனர்கள் ஜெகநாதன், சிவலிங்கம், கோவிந்தசாமி, குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.