ராஜபாளையம்,
ராஜபாளையம் தென்றல் நகர் பின்புறம் உள்ள ஆதியூர் கண்மாயில் மணல் திருடுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மண்டல துணை தாசில்தார் அப்பாதுரை மற்றும் போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆதியூர் கண்மாயில் இருந்து மணல் ஏற்றி வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி அந்த டிராக்டரில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்த ராஜபாளையம் வடக்கு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.